tamilnadu

img

நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், ஜூலை 26 - நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட 600க்கும் மேற் பட்ட குடியிருப்புகளுக்காக அமைக் கப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலை யப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஞாயிறன்று ஆய்வு மேற் கொண்டார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதா வது, திருச்செங்கோடு, பள்ளிபாளை யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 600க்கும் மேற்பட்ட குடியிருப்பில் வாழ்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற் பவும், குடிநீர் தேவைக்காகவும் இக் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட் டுள்ளது.

இந்த புதிய திட்டம் 2050 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு பயன்பெ றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள் ளது.  மேலும், இத்திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கோட்டை கதவணைக்கு மேலே காவிரி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட்டு வருகின்றது.

இக்கிணற்றிலிருந்து குடிநீரானது 12 ஆயிரத்து 570 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள பிரதானக் குழாய் கள் மூலம் நீர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டு செல்லப்படும்.

சுத் திகரிக்கப்பட்ட குடிநீரானது நீருந்து குழாய்கள் மூலம் ஊராட்சி தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அனுப் பப்பட்டு பொது மக்களுக்கு குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது.

இதன்மூலமாக திருச்செங்கோடு ஊராட்சி, பள்ளிபாளையம் ஊராட்சி ஆலாம்பாளையம் பேரூராட்சி, படை வீடு பேரூராட்சி மற்றும் சேலம் மாவட் டம் சங்ககிரி பேரூராட்சி ஆகியவை பயன்பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

;