tamilnadu

img

மத்திய பட்ஜெட்டை கண்டித்து வி.ச, வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, பிப்.13- மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண் டித்து திருச்செங்கோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச் செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மத்திய பாஜக அரசின் விவசாயிகள், தொழிலாளர் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட தலைவரும், ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான எ.ஆதிநாராயணன், மாவட்ட செயலாளர் பி.பெருமாள், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் செ.நல்லாக் கவுண்டர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி, செயலா ளர் பி.சபாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளும், தொழிலாளர் களும் திரளாக கலந்து கொண்டு மத் திய அரசை எதிர்த்து முழக்கங்களை  எழுப்பினர். நிறைவாக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரா.வேலாயுதம் நன்றி கூறினார்.