நாமக்கல், ஜூலை 30- பணியின் போது உயிர் நீத்த இராணுவப் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு இமாச்சல் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநி லங்களில் பள்ளிகளில் சேரு வதற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகாராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதா வது, படைப்பணியின் போது போரில் உயிர்நீத்த படைவீரர், முன்னாள் படை வீரர்கள் சார்ந்தோர்களின் 10 முதல் 16 வயது வரை யுள்ள ஆண் சிறார்களை இமாச்சல் பிரதேசம், இரா ஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள இரா ணுவப் பள்ளியில் ஜனவரி 2021 ஆம் ஆண்டு முறையே 6, 9 மற்றும் 11 ஆம் வகுப் புச் சேர்க்கைக்கான எழுத் துத் தேர்வு டிசம்பர் 2020 மாதம் நடைபெற உள்ளது. இப்பள்ளியில் சேர 5,8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கள் அல்லது தற்போது பயின்று வரும் மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இவர்களில் 11-ம் வகுப்பு சேர விரும்புவர்கள் 10ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இதில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப் டம்பர் 2020 முதல் அக்டோ பர் 2021-க்குள் தாங்கள் விண்ணப்பம் பெற்ற பள்ளி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கட்டணம் மற் றும் இடஒதுக்கீடு விவரங்க ளுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவ லகத்தை நேரிலோ அல் லது தொலைபேசி எண் ணிலோ தொடர்பு கொள்ள லாம். இவ்வாய்ப்பை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து அதிக அள வில் பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.