tamilnadu

ஊரடங்கு காலத்திலும் நகை கடன் வசூலிக்கும் வங்கி

பள்ளிபாளையம், மே 14- கொரோனா ஊரடங்கு காலத்திலும் நகைக் கடனுக்கான வட்டியை கட்டச் சொல்லி மெர்கண்டைல் வங்கி நிர்வாகம் வசூலித்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கி  மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் தவணை களை மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மெர் கண்டைல் வங்கியின் பள்ளிபாளையம் கிளை வாடிக்கையாளர்களை செல் போனில் அழைத்து நகைக் கடனை கட்டு மாறு நிர்பந்தித்து வருவதாக குற்றஞ்சாட் டப்படுகிறது. இதுதொடர்பாக அவ்வங்கி யில் நகை கடன் பெற்றிருந்த சுமை தூக்கும் தொழிலாளி கூறுகையில்,  கடந்த ஆண்டு எனது குடும்ப தேவைக் காக 2 சவரன் நகையை தமிழ்நாடு மெர் கண்டைல் வங்கியில் ரூ.30 ஆயிரத்திற்கு அடமானம் வைத்திருந்தேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் கெடு தேதி வந்த  நிலையில், வங்கியில் இருந்து தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு வங்கி ஊழியர்  ஒருவர் நகைக்கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் முடிந்து விட்டது என்றும் கூடுதலாக ஒரு மாதமாகி விட்டது என்றும் எனவே உடனடியாக அசல் மற்றும்  வட்டியை செலுத்துங்கள். இல்லையென் றால் நகை ஏலம் விடப்படும் என தெரிவித் தார். ஏற்கனவே, ஊரடங்கு காலத்தில் வேலையுமில்லாமல், வருவாயும் இழந் துள்ள நிலையில், ரூ.30 ஆயிரத்திற்கு அட மானம் வைத்த நகையை ரூ.32 ஆயிரம் கொடுத்து மீட்டு மீண்டும் அடகு வைத் தேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கி நிர்வாகங்கள் கடன் தொகை மற்றும் வட்டியை வசூலிப்பதை நிறுத்தி வைத்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் அரசு அறிவித்தாலும் அவை எங்குமே நடைமுறைக்கு வரவில்லை என் பதே யதார்தம் என அவர் புலம்பிச் சென் றார்.

;