tamilnadu

img

பட்டினி போக்கி உதவும் பெங்களூரு சிஐடியு

பணித்தலங்களில் முடங்கிய தொழிலாளர்கள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் சம்பளம் இல்லை. குடும்பமாக 250 க்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கும் அந்த வளாகத்தில் நான்கே கழிப்பறைகள். போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அதையும் முறையாக பராமரிக்க முடியாமல் கடுமையான சுகாதாரக்கேடு, துர்நாற்றம். பெங்களூரு ஒசகோட்டை ரோடில் உள்ள அகர்வால் இரும்பு கிடங்கில்தான் இப்படியொரு அவலம். 

தகவல் அறிந்ததும் சிஐடியு பெங்களூரு மாவட்டச் செயலாளர் பி.முனிராஜ், மாநகாரட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி களிடம் தெரிவித்தார். 

சனியன்று கர்நாடக தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் பி.என்.பச்சே கவுடா, உயர்நீதிமன்றம் நியமித்த பார்வையாளர், தாசில் தார் மற்றும் காவல்துறையினர் சிஐடியு கட்டுமான சங்க நிர்வாகி களுடன் அந்த வளாகத்தை திடீர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களைச் சேர்ந்த தொழிலா ளர்கள் தங்களது துயரத்தை தெரி வித்தனர். உடனடியாக உணவுப் பொட்டலங்களும், முக கவசமும் வழங்கப்பட்டது. திங்களன்று மார்ச் மாத சம்பள பாக்கியுடன் அரிசி மற்றும் உணவுப்பொருட் களை அகர்வால் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்தினர். 

10 ஆயிரம் குடும்பங்களுக்கு சிஐடியு நேரடி உதவி

இதுபோல் கடந்த வாரம் ஒயிட் பீல்டு ஊடிஸில் ராஜா ஹவுசிங் கட்டுமான வளாகத்தில் நடந்த அதிரடி சோதனையில் 180 தொழி லாளர்கள் உணவின்றி தவிப்பது தெரியவந்தது. சிஐடியு தலை யிட்டு சம்பள பாக்கி கிடைக்கவும் உதவியது. அவர்களுக்கு தின சரி 2 வேளை உணவுப் பொட்ட லங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பெங்களுரு மாவட்ட சிஐடியு செய லாளர் முனிராஜ் கூறுகையில், “கொரோனா நோய் தொற்றை தடுக்க ஒரே வழியாக அறிவிக்கப் பட்ட ஊரடங்கால் வெளி மாநில தொழிலாளர்கள், கட்டுமானம், ஆட்டோ போன்ற முறைசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக பெங்களூரு கிழக்கில் உள்ள மாரத்தள்ளி, குஞ்சூர், ராமமூர்த்தி நகர் போன்ற பகுதிகளில் மட்டும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். ஊடரங்கு அறிவிக்கப் பட்ட உடன் சிஐடியு தனது சொந்த செலவில் அரிசி, ஆட்டா, காய்கறி போன்றவை அடங்கிய பைகளை பத்தாயிரம் குடும்பங் களுக்கு வழங்கியுள்ளது” என்றார்.

மேலும், ‘பாசிமனை டெக் பார்க் கட்டுமானப்பணியில் ஈடு பட்டிருந்த வெளிமாநில தொழிலா ளர்கள் 1750 பேர் குடும்பத்துடன் அந்த வளாகத்துக்குள் சிக்கி இருந்தனர். எங்களை உள்ளே அனுமதிக்க அந்த நிர்வாகம் மறுத்து விட்டது. காவல்துறை யின் உதவியால் அதிகாரிகளுடன் சேர்ந்து நாங்கள் உள்ளே சென் றோம். அதன்பிறகுதான் அவர் களுக்கு சம்பள பாக்கியும், உண வுப் பொருட்களும் கிடைத்தன. சிஐடியு சார்பில் இரண்டு குழுக் கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள் ளன. பாதிக்கப்பட்ட மக்களை கண் டறிந்து அதிகாரிகளை தலை யிடச் செய்வது ஒரு குழு. மற் றொரு குழு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உணவு, மாஸ்க், சானிட்டை சர்கள் போன்றவற்றை வழங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

சிபிஎம் பெங்களூரு கிழக்கு பகுதி செயலாளர் என்.நாகராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி. முனிராஜ், சிஐடியு கட்டுமான சங்க நிர்வாகிகள் ஜி.வெங்க டேஷ், ரமேஷ் மற்றும் வசந்தம்மா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பணிகளில் மாநகராட்சி, தொழிலா ளர் நலத்துறை, காவல்துறை யுடன் இணைந்து தொடர்ந்து ஈடு பட்டுள்ளனர்.

- சி.முருகேசன்