tamilnadu

img

நீலகிரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக!

சென்னை, ஆக.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட நிவாரண மையங்களில், ஏராளமான குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாய சாகுபடிகள் பெரிதும் அழிந்துள்ளன.  தமிழக அரசு உடனடியாக இம்மக்களுக்கு நிவாரண உதவி கள் வழங்கிடவும், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள், சேதமடைந்த வீடுகள், மரங்கள் உள்ளிட்டவை களை கணக்கெடுத்து உரிய நட்ட ஈடு வழங்கிட வேண்டு மெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை கள், துணிமணிகள், வீட்டு பொருட்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டு மென கட்சியின் மாவட்டக்குழுக்களை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க பணிகளில் முழுமை யாக ஈடுபட வேண்டுமென கட்சி தோழர்களை கேட்டுக் கொள்கி றோம்.

நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை - வெள்ளத்தால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடைமைகளை இழந்துள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டத் தலைவர்கள் நேரில் சென்று மேற்கொண்டு வருகின்றனர். அத்திபாளி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விபரங்கள் அறிந்தனர்.