tamilnadu

தமிழகம் முழுவதும்... 1ஆம் பக்கத் தொடர்ச்சி...

மாவட்டங்களில் அரசு கட்டித்தருவ தாக அறிவிக்கப்பட்ட 1 லட்சம் வீடுகள் கட்டும் பணியை உடன் துவங்க வேண்டும்.மேற்கண்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மற்றும் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட  ஆட்சியர் அலுவலகங்களிலும் மனு அளித்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் போராட்டத்தை சீர்குலைக்கும் விதத்தில் வருவாய்துறையும், அதிகாரிகளும் போராட்டம் அறிவிப்பு செய்த பிறகுபட்டா, ஓய்வூதியம் வழங்குகிறேன் என்று போராட்டத்தை திசைத்திருப்ப முயற்சித்தனர். இருந்த போதிலும் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். 

சில வட்டாட்சியர் அலுவலகங்களில்  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பட்டா, ஓய்வூதியம் அளிப்பதற்கான உறுதிமொழியை அதிகாரிகள் அளித்தனர். சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே 5 முதியோருக்கான ஓய்வூதியத் தொகை வழங்குவதற்கான ஆணையை வழங்கினர். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன் நடைபெற்ற மனு அளிக்கும்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கடலூரில் சங்கத்தின் அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு, மாநிலத்தலைவர் ஏ.லாசர்  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரிலும், மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சேலம் மாவட்டம் சங்ககிரியிலும், பொருளாளர் எஸ்.சங்கர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திலும், மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை விழுப்புரம் மாவட்டம்உளுந்தூர்பேட்டையிலும் பங்கேற்றனர்.  போராட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.