tamilnadu

img

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் நெஞ்சை உருக்கும் இரண்டாவது வீடியோ அழைப்பு

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்துஈரானில் மீன்பிடிக்கச்சென்று, கொரோனா வைரஸ்பாதிப்பால் அங்கு சிக்கி தவிக்கும் மீனவர்கள் தங்களை மீட்கும்படி ஏற்கனவே வாட்ஸ்அப் மூலம் காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் வாட்ஸ்அப் மூலம் இரண்டாவது காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: இங்கு தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் எங்களை நாங்கள்தற்காத்துக் கொள்வதற்கு முடிந்த அளவு பாடுபடுகிறோம். இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று எங்களுக்கு தெரியவில்லை. இந்தியா தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு பாதிப்பு உண்டாகும். அதுமட்டுமில்லாமல் நாங்கள் கடைக்கு செல்லவேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் நடந்து சென்று வரும் சூழ்நிலையில் உள்ளோம். உணவு பொருட்கள் சமையல் பொருட்கள் தீர்ந்து வருகிறது. ஏற்கனவே நான்கைந்துபடகுகளில் தீர்ந்துவிட்டது. இருக்கும் பொருட்களை வைத்து நாங்கள் சமாளித்து வருகிறோம்.

எங்களிடம் மருந்து பொருட்கள் இல்லை. ஒரு மாஸ்க்வாங்க கூட இயலாத நிலையில் உள்ளோம். எனவே இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுத்து வெகு விரைவில் எங்களை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அங்குள்ள இந்திய மீனவர்களின் நிலைமையும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால் வைரஸ் இந்தியமீனவர்களை தாக்கும் முன்பு ஈரானில் மீன்பிடிக்கச் சென்றகுமரி மாவட்டத்தை சார்ந்த 600க்கும் அதிகமான மீனவர்களையும் மற்றும் திருநெல்வேலி தூத்துக்குடி நாகப்பட்டினம் பகுதிகளை சார்ந்த சுமார் 762  மீனவர்களை உடனடியாக விரைந்து மீட்டு தாயகம் சேர்க்க 500க்கும் அதிகமான மீனவர்குடும்பத்தினர் குமரி மாவட்டஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.

;