tamilnadu

img

அண்ணா சிலை மீது காவித்துணி... சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் குழித் துறையில் உள்ள அண்ணாசிலைக்கு காவித்துணி போர்த்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா துரை, சமூகநீதி கொள்கைகளை பின் பற்றி தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவராவார். வகுப்புவாத சக்திகள்குறிப்பாக சங்பரிவார் அமைப்பினர்சமூகநீதி கருத்துகள் மீதும், அதை பின் பற்றுவோர் மீதும் வெறுப்பை விதைத்து வருகின்றனர். அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் விரும்பும் குமரி மாவட்ட மக்களிடையே தங்களது வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை திணிக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாகவும், மத்திய பாஜக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவும் தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் இழிசெயலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலையை அவமரியாதை செய்து தமிழகத்தில் கலவரங்களை தூண்டும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம்குழித்துறை பேருந்து நிலையம் சந்திப்புபகுதியில் உள்ள ஆளுயர அண்ணாசிலைக்கு மர்ம நபர்கள் காவித் துணியைபோர்த்தி சென்றுள்ளனர். வியாழனன்று காலை அவ்வழியாக வந்தவர்கள் இதைப்பார்த்து குழித்துறை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடம் வந்த குழித் துறை காவல் துறையினர் அண்ணா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த காவித்துணியை அகற்றினர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்துவிசாரணை நடத்தி வருகின்றனர். 

சிபிஎம் கண்டனம்
அனைத்தையும் காவி மயமாக்கும்நோக்கத்துடன் சமூக நீதி போராளியானதமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றமுன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை சிலையை அவமதிப்பு செய்துள்ளனர். குழித்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு காவித்துணி போர்த்தி அவமதிப்பு செய்த- இழிசெயலில் ஈடுபட்டஉண்மை குற்றவாளிகைளை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ளஅறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

;