நாகப்பட்டினம், அக்.21- நாகப்பட்டினம், அன்னை சத்யா அரசுக் குழந்தைகள் காப்பகத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் வெள்ளி யன்று உலக முதியோர் தினவிழா ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமையில் நடைபெற்றது. விழாவில், மூத்த குடிமக்களுக்கு சால்வை அணி விக்கப்பட்டு, மழைக்காலம் என்பதால் அவர்களுக்குக் குடை கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மூத்த குடிமக்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. மாவட்ட சமூக நல அலுவலர் செ.உமையாள், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் மீ.செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.