tamilnadu

img

கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் விடக் கோரி நாளை போராட்டம்

நாகப்பட்டினம்:
காவிரி டெல்டா பகுதிகளுக்கு உடனடியாகக் காவிரி நீர் வரவேண்டும் எனக் கோரி, இம்மாதம், ஆகஸ்ட்-31 அன்று,  டெல்டா பகுதிகளான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய  மாவட்டங்களில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று, நாகப்பட்டினத்தில், வியாழக்கிழமை அன்று, செய்தியாளர்கள் சந்திப்பில் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.நாகப்பட்டினம், வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்தில், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், சி.பி.எம். நாகை மாவட்டச் செயலாளர்நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், பெ.சண்முகம் கூறியதாவது: மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டு 15 நாட்களாகியும், இன்னும்கடைமடைப் பகுதிகளுக்குச் சொட்டு நீர் கூட வந்து சேரவில்லை. அணையிலிருந்துதண்ணீரைத் திறந்து விட்ட பிறகு, இப்போதுதான், அரசு மிக அலட்சியமாக நீர் நிலைகளில்தூர் வாரும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இது எதற்காகவென்றால், பேருக்குத் தூர் வாரிவிட்டோம் எனப் போக்குக் காட்டி, இதற்காக ஒதுக்கீடு செய்த தொகையை வாரிக் கொள்வதற்காகத்தான் இப்பணி  நடைபெறுகிறது.இதனால், தண்ணீர் வராமல், குறுவைப்பயிர்கள் நாசமாகின்றன. மே, ஜூன் மாதங்களில் செய்து முடித்திருக்க வேண்டிய தூர் வாரும் பணியை இப்போது செய்வது அரசின் அலட்சிய-மெத்தனப் போக்கையே காட்டுகிறது. காலம் கடந்து தூர் வாரும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, 20 ஆயிரம் கன அடி நீரை அணையிலிருந்து திறந்து விடவேண்டும். மேலும், வெண்ணாற்றில் காவிரி நீர் இதுவரை வரவில்லை. வெண்ணாற்றுப் பாசனப் பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடவேண்டும்.

குறைவான உழவு மானியம் 
குறுவைச் சாகுபடிக்காக ஏக்கருக்கு ரூ.500- உழவு மானியமாக அரசு தருவது என்பது மிக குறைவான  தொகையாகும். இதனைஉயர்த்த வேண்டும். அதுவும், 5 ஏக்கருக்கு மேல் உழவு மானியம் இல்லை என்பது அநீதியாகும். மோட்டார் வைத்துத் தண்ணீர் இறைவை மூலம் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கு இன்னும் அரசு கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், நெல் ஈரப்பதம் மிகுந்து வீணாகிவிடும்.எனவே, இப்படிப்பட்ட மிக அவசிய-அத்தியாவசியக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, இம்மாதம்(நாளை) 31 அன்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாபெரும் போராட்டம் நடைபெறும். இவ்வாறுபெ.சண்முகம் கூறினார்.

;