நாகப்பட்டினம், மே 24- ரயில்வே பாதைகள் மின்மயமாக்கும் பணி, தெற்கு ரயில்வேயில் விரைவு பெற்று வருகிறது. ஏற்கனவே, திருச்சி யிலிருந்து தஞ்சாவூர் வரையும் அதன்பின் தஞ்சையிலிருந்து திருவாரூர் வரையும் மின் வழி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, திருவாரூரிலிருந்து, நாகப்பட்டினம் வழி யாகக் காரைக்கால் வரையுள்ள 48 கிமீ தூர இருப்புப் பாதை ரூ.25 கோடி மதிப்பில் இப்பணி தொடங்கியது. ஆனால் ஊர டங்கு காரணமாக பணி தடங்கல் ஏற்பட்டது. இதன்பின் ஊரடங்கு தளர்வால் தற்போது இப்பணி நிறைவு பெற்றது. இதையடுத்து சென்னையிலிருந்து மயி லாடுதுறை வழியாகத் திருவாரூக்கு ஒரு டீசல் ரயில் வரவழைக்கப்பட்டு, அது, சனிக்கிழமை காலை புறப்பட்டுக் காரை ககால் வரை சென்றது. இதன்பின் அன்று மாலை, காரைக்காலில் நிறுத்தப்பட்டி ருந்த மின்சார இஞ்சினில் இரண்டு பெட்டி கள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்ட மாகப் புறப்பட்டுத் திருவாரூக்கு 45 நிமி டத்தில் வந்து சேர்ந்தது. இடையே, நாகப் பட்டினம், ரயில்வே ஸ்டேஷனில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு நிலையம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு வெற்றிகர மாக நடைபெற்றதாக ரயில்வே அதிகாரி கள் தெரிவித்தனர்.