tamilnadu

img

நாகூர் தர்கா ஆண்டுப் பெரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நாகப்பட்டினம், ஜன.29- நாகூர் ஆண்தகை சாகுல் ஹமீது காதிர் ஒலியுல்லா 463-ஆம் ஆண்டு கந்தூரிப் பெருவிழா, 26 அன்று முன்னிரவில் கொடியேற்றதுடன் துவங்கியது. அன்று மாலை, நாகப்பட்டினம் முக்கிய வீதிகள் வழியாகத் திருக்கொடி தாங்கிய மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட பெரிய பல்லக்கு மற்றும் 20 க்கு மேற்பட்ட, பல்வேறு அலங்காரப் பல்லக்குகள், மினரா வடிவ வாகனங்கள் மேள தாளங்கள், இன்னிசைகள் முழங்க, நகர் வலம் வந்து, நாகூரில் முக்கிய வீதிகளில் பவனி வந்து, நாகூர் தர்கா திருவாசல் முன்பு நிறைவு பெற்றது. அதன் பின், தர்காவின் 5 மினராக்களில் கொடிகள் ஏற்றப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வரும் 4-ம் தேதி அன்று இரவு, பிரசித்தி பெற்ற சந்தனக் கூடு வைபவம் நடைபெறும். 8-ம் தேதி தர்காவில் கொடி இறக்கத்துடன் ஆண்டுப் பெருவிழா நிறைவு பெறும். இந்த 14 நாட்களிலும் நாகூருக்குப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மதம், இனம், மொழி கடந்த பல்லாயிரக் கணக்கில் மக்கள் சங்கமிப்பார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நாகூர் தர்காவின் இடைக்கால நிர்வாகிகள் நீதிபதி (ஓய்வு) எஸ்.எஃப்.அக்பர், கே.அலாவுதீன், ஐ.ஏ.எஸ்.(ஓய்வு) மற்றும் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் உள்ளிட்டோர் விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

;