tamilnadu

img

பழையாறு மீனவர்கள் 7-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

சீர்காழி, ஜூலை 26- கொள்ளிடம் அருகே பழை யாறு துறைமுகத்திலிருந்து 7-ம் நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் டிக்க செல்லவில்லை. நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடித் துறை முகத்திலிருந்து தினந்தோறும் 300 விசைப்படகுகள், 300பைபர் படகு கள் மற்றும் 250 நாட்டுப் படகுகள் மூலம் 5 ஆயிரம் மீனவர்கள் கட லுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்ற னர். அதிவேக சீன என்ஜின் பொருத் தப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட 40 விசைப்படகுகள் மூலம் மீன வர்களின் ஒரு பகுதியினர் பழை யாறு துறைமுகத்தின் மூலம் கடந்த 2 வருடங்களாக கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருவதால் அங்கீகரிக் கப்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு போதிய மீன் கிடைக்காமல் ஏமாற்ற மடைந்து வந்தனர். எனவே அதிவேக என்ஜின் விசைப்படகுகளை தடை செய்யக் கோரி கடந்த 19-ந்தேதி முதல் அனைத்து மீனவர்களும், கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த  21-ந் தேதி சீர்காழி தாசில்தார் அலு வலகத்தில் மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி தலைமையில் மீன்பிடித் துறை அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஆகஸ்ட் 30-ந் தேதிக்குள் அதிவேக தடை செய்யப்பட்ட என்ஜின்களை விசைப் படகிலிருந்து அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு அதிவேக என்ஜின் படகு உரிமையாளர்கள் சம்மதம் தெரி விக்காமல் வெளியேறி விட்டனர். இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை மயிலாடுதுறை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறி விக்கப்பட்டுள்ளது. எனினும், இரு தரப்பைச் சேர்ந்த மீனவர்களும் 7-ஆம் நாளான வெள்ளியன்று வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதுகுறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர் பொன்னின்செல்வன் கூறுகையில், தடைசெய்யப்பட்ட விசைப்படகு கள் மீண்டும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அந்த படகு களில் உள்ள அனைத்து அதிவேக சீன எஞ்சின்களை அகற்றும் வரை யில் வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.

;