தரங்கம்பாடி, செப்.1- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி நூற்றாண்டு அரிமா சங்கம் 2019-20 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளான தலைவர் ராஜேந்திரன், செயலாளர் நெடுமாறன், நிர்வாக அலுவலர் ஜான் சைமன், பொருளாளர் நாகராஜ் உள்ளிட்டோரை முன்னாள் மாவட்ட ஆளுநர் முகமது ரபி வாழ்த்திப் பேசினார். விழாவில் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நிவேதா முருகனுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் கல்விச் சேவை செம்மல் விருதையும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வீரதீரச் செயலுக்கான விருதையும், முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் வெங்கட்ராமன் வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் வீரபாண்டியன் பள்ளி, கல்லூரி சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மண்டல தலைவர் சந்திரசேகரன், வட்டாரத் தலைவர் அசோக், செயலாளர் ஐயப்பன், சுந்தரவடிவேலன், ஜெகதீஸ், அண்ணாதுரை, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.