நாகை மாவட்டம் பொறையார் சர்ச் தெரு, கடுதாசிப்பட்டறை, அண்ணா காலனி, தஞ்சாவூரான்மேடு, ஒழுமைமங்கலம், சோனவன்தோட்டம், இச்சிலடி, தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 750 ஏழை,எளிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. வட்டாட்சியர் சித்ரா நிவாரணப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். இதில் தரங்கம்பாடி-பொறையார் லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.