சீர்காழி, ஜூன் 1- நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தற்பொழுது எள் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. பங்குனி மாதத்தில் பயிரிடப்பட்ட எள் பயிர் தற்பொழுது அறுவடை செய்யப் பட்டு வருகிறது. மிகக் குறைந்த பரப்ப ளவில் விவசாயிகள் எள் பயிரிட்டுள்ள னர். அறுவடைப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்க ளிலும் வேலை நடைபெற்று வருவதால் விவசாயப் பணிகளுக்கு வேலை யாட்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையி லேயே வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து எள் அறுவடை பணிகளில் ஈடுபட்டனர். இதே போல் உளுந்து, நெல், குறுவை பயிர் சாகுபடி பணியிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.