tamilnadu

img

நாகையில் புயல் எச்சரிக்கை...

நாகப்பட்டினம்:
வங்கக் கடலில் ஆழ்ந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் துறைமுக அலுவலகத்தில் புயல் எச்சரிக்கை முதலாம் கூண்டு ஏற்றப் பட்டுள்ளது.வடமேற்கு மற்றும் மத் திய மேற்கு வங்கக் கடலில் 180 கிலோ மீட்டர் தூரத்தில் கற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, அது மேலும் வலுவாகிப் புயலாக மாறக் கூடும் என்பதால், சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினம் தவிர, பாம்பன், காரைக்கால், மன்னார் வளைகுடாப் பகுதி, புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளிலும் புயல்எச்சரிக்கை முதலாம் கூண்டுஏற்றப்பட்டுள்ளது. மீனவர் கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.