tamilnadu

img

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல் ஆய்வாளர்... சிபிஎம் சாலை மறியல் போராட்டம்...

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுதிறனாளி பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துகர்ப்பிணியாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிக்கு துணையாக செயல்படுவதோடு, புகார் குறித்து கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரை ஒருமையில் பேசிய பெரம்பூர் காவல் ஆய்வாளரை  கண்டித்து  சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது.26 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி பெண் (ஒரு கால், கை செயல்படாதவர்) ஒருவரை அதே பகுதியைச்சேர்ந்த பாட்ஷா என்கிற ராஜேஷ் (27)கடந்த 1 வருடமாக பாலியல் ரீதியாகதொல்லை கொடுத்து வந்துள்ளான். பலமுறை கண்டித்த பிறகும் தொடர்ந்து அப்பெண்ணை மிரட்டி பாலியல் ரீதியில் தொல்லைக் கொடுத்து வந்தநிலையில் தற்போது அந்த மாற்றுத்திறனாளிப் பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இதை அறிந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் சென்று கடந்த ஏப்.4, 7 தேதிகளில்இருமுறை பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், புகாரைபெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர்சிவதாஸ் உரிய விசாரணை செய்து மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பாமல் குற்றவாளிக்கு ஆதரவாகவே பேசி இருக்கிறார்.  

இதனையடுத்து ஏப்.10 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் சென்று காவல் ஆய்வாளரிடம் புகார் சம்பந்தமாக விசாரித்தபோது ஆய்வாளர் சிவதாஸ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசனை ஒருமையில் பேசியுள் ளார். பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிக்கு பெண்ணுக்கு நியாயம் கேட்டவரை தரக்குறைவாக பேசியதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரம்பூர் கடைவீதியில் திடீர்சாலை மறியலில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளி பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கி கர்ப்பிணியாக்கியவன் மீது உரிய வழக்குப் பதிந்து கைதுசெய்ய வேண்டும்.

குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படுவதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரை ஒருமையில் பேசிய ஆய்வாளர் போராட்டம் நடைபெறும்இடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இப்போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ஜி.ஸ்டாலின்,  மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கணேசன், ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் சி.விஜயகாந்த், மாவட் டக் குழு உறுப்பினர்கள் சி மேகநாதன், வ.பழனிவேலு, ஆர்.ரவீந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சண்முகம் உள்ளிட் டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். சில மணி நேரம் நீடித்த போராட்டத்திற்கு பிறகு வந்த ஆய்வாளர் சிவதாஸ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதோடு, குற்றவாளியை கைது செய்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கை மாற்றுவதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

;