tamilnadu

ஆக்கூர் கலைமகள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், ஆக்கூர் கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.எஸ் குடியரசு தலைமை வகித்து   கண்காட்சியை திறந்து வைத்தார்.  பாரம்பரிய உணவு வகைகள், உபயோகமற்ற பொருட்க ளைக் கொண்டு மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள், சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிகள் மற்றும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 ஆயிரத்து க்கும் அதிகமான விதைப்பந்துகள் என வித்தியாசமான படைப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்து பார்வை யாளர்களை கவர்ந்தனர்.  தாளாளர் நெடுஞ்செழியன், செயலர் ஜெயப்பிரகாசம், தலைமையாசிரியர் சிவக்குமார், சிறப்பு அலுவலர் டிஸ்னி, அலுவலர்கள் பழனிவேல், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விதை பந்துகளை வழங்கினார்.

;