tamilnadu

புதுமண்ணியாறு வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

சீர்காழி, செப்.9-  சீர்காழி அருகே புதுமண்ணியாறு பாசன வாய்க்காலை விரைந்து தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சுமார் பத்தாயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் பிரதான பாசன வாய்க்காலாகவும், வடி கால் வாய்க்காலாகவும் இருந்து வருவது புது மண்ணி யாறு ஆகும். இந்த பிரதான பாசன வாய்க்கால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் வாய்க்கால் தூர்ந்தும், நெய்வேலி காட்டாமணக்கு செடி மற்றும் சீமை கருவேல முட்செடிகள் அதிகளவில் வளர்ந்துள் ளன. மேட்டூர் அணையில் பாசனத்திற்கு திறந்து விடப் பட்டுள்ள நிலையில் கடைமடை பகுதியாக இருந்து வரும் கொள்ளிடம் பகுதிக்கு தண்ணீர் எப்போதுமே தாமத மாகத் தான் வரும். இந்நிலையில் பாசன வாய்க்காலை இது வரையில் தூர்வாராமல் இருப்பது அதிகாரிகளின் மெத்தன போக்கையே காட்டுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் சிறிதளவு வரும் தண்ணீர் கூட பாசனத்திற்கு சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் சம்பா நெற்பயிர் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே புதுமண்ணி யாறு பாசன வாய்க்காலை உடனடியாக தேனூரிலிருந்து பழையாறு வரை 20 கிமீ தூரத்திற்கு தூர்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.