tamilnadu

img

கிராமத்திற்குள் புகும் கடல்நீர் தடுப்புச் சுவர் அமைக்கக் கோரிக்கை

தரங்கம்பாடி, மே 25- நாகை மாவட்டம் தரங்கம்பாடி ஒட்டியுள்ள கடலோர கிராமமான சந்திரபாடியில் கடல் சீற்றங்களின் போது கடல்நீர் உட்புகுகிறது. புயல் ஏற்படுகிற போது மக்களை அச்சுறுத்தும் வகையில் வழக்கத்தி ற்கு மாறாக அதிகளவு கடல்நீர் கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. அதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.  அதனால் கூறுவதோடு உடனடியாக கருங் கல் பாறை கற்கள் மூலம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென ஊராட்சி தலைவர் பிரமிளா ராஜ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.  பெரும்பாலான கடலோர பகுதி யில் தடுப்பு சுவர் அமைக்கப் பட்டுள்ள நிலையில் சந்திரபாடி மற்றும் சின்னூர்பேட்டை கிராம கடலோரப் பகுதியில் மட்டும் தடுப்பு  சுவர் இதுவரை அமைக்கப்பட வில்லை.

700 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ள இங்கு 450 பைபர் படகுகள், 50 நாட்டு படகு கள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். கடல் சீற்றங்களின் போதும் புயல் காலங்களின் போதும் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்து கடல் அரிப்பு அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  தரங்கம்பாடி வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு விட்டது. குறுகிய தொலைவே உள்ள சந்திர பாடி, சின்னூர்பேட்டை கடலோரப் பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நண்டலாற்றின் கிளை ஆறான முட்டியாற்று முகத் துவாரத்தை தூர்வாரி ஆழப்படுத்தி னால் மீன்பிடித் தொழில் செய்ய வசதியாக இருக்கும் என்றும் ஊராட்சி தலைவர் பிரமிளா ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

;