tamilnadu

நூறு நாள் வேலையை முழுமையாகச் செயல்படுத்தக் கோரிக்கை

நாகப்பட்டினம், ஜூன் 01- நூறு நாள் வேலையை முழுமையாகச் செயற்படுத்தி, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து வாடும் வேலை அட்டை பெற்றுள்ள ஏழை எளிய மக்களுக்கு வேலை வழங்கி, அரசு அறிவித்தப்படி சட்டக் கூலியை முழுமையாக வழங்கிட  வேண்டும். மேலும், சுழற்சி முறையில் வேலை வழங்குவதைத் தவிர்த்து, ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைத் தேர்வு செய்து, அனைவருக்கும் ஒரே சமயத்தில் வேலை வழங்கிட வேண்டும். வேலை நடைபெறும் நாட்களில் அனை வருக்கும் முகக்கவசம் வழங்க வேண்டும்.  

கடுமையான வறட்சி மிகுந்த கோடைக்காலம் என்பதால், அனைத்து ஊராட்சிப் பகுதி களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தும் மனு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், நாகை மாவட்டக்குழு சார்பில் வெள்ளிக்கிழமை  நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி தலைமை வகித்தார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் ஆட்சியரிடம் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் மாநிலத் துணைத் தலைவருமான ஜி.ஸ்டா லின், மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

;