tamilnadu

img

செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தரங்கம்பாடி, ஜுன்.03-  நாகப்பட்டினம் விற்பனை குழு செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடப்பாண்டிற் கான,  முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்தை மாவட்ட வேளாண் வணிகதுறை இணை இயக்கு நர் ரவிசந்திரன் துவக்கி வைத்து விவசாயிகள் தரமான பருத்தியை கொண்டுவந்து அதிக விலை பெற்றிட அறிவுரை வழங்கினார், மாவட்ட விற்பனை குழு செயலாளர் வித்யா கூறுகையில், வாரம் தோறும் திங்கள் கிழமை காலை 11மணிக்கு செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஏலம் நடைபெறுவ தால் விவசாய பெருமக்கள் தங்களது விளைபொருளை சனிகிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளிலே கொண்டு வந்து விற்பனை கூடத்தில் வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து விளை பொருளுக்கு நல்ல விலை பெற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொண்டார் உடன் வேளாண் அலுவலர் கிருத்திகா மற்றும் அலு வலக பணியாளர்கள்  உடன் இருந்தனர், திங்கள் கிழமை ஏலத்தில் 43 விவசாயிகள் நூற்றுக்கணக்கான பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து பயன் பெற்றனர் அதிகபட்சமாக பருத்தி கிலோ ஒன்றுக்கு ரூ.43.22க்கும் குறைந்த பட்ச விலை ரூ.39க்கும்   ஏலம் போனது முடிவில் விற்பனை கூட  பொறுப்பாளர் பாபு நன்றி கூறினார்.

;