tamilnadu

img

மயிலாடுதுறையில் இராமலிங்கம் வெற்றி

தரங்கம்பாடி, மே 24- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செ.இராமலிங்கம் 59,9292 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 337978 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 69030 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 41057 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி 17005 வாக்குகளை பெற்றனர். 2 லட்சத்து 61 ஆயிரத்து 314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற செ.இராமலிங்கத்தின் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சுரேஷ்குமார் வழங்கினார். இராமலிங்கம் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.