தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் திட்ட தலைவர் சிவராஜன் தலைமையில் நாகப்பட்டினம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து, சிஐடியு மாவட்ட செயலாளர் சீனி.மணி, திட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் கோட்டத் தலைவர்கள், செயலாளர்கள் அமைப்பின் நிர்வாகிகள் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.