தரங்கம்பாடி, நவ.5- நாகை மாவட்டம் தரங் கம்பாடி அருகேயுள்ள சின் னங்குடி மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சின்னங்குடி கிராமத்தில் மீனவர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் மீன் இறங்குதளம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். கோரிக் கையை ஏற்று சின்னங்குடி கிராமத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.550 லட்சத்தில் மீன் இறங்கு தளம், படகு அணையும் சுவர், ஏலக் கூடம், வலை பின்னும் கூடம், ஆழப்படுத்துதல் மற்றும் சாலை உள்ளிட்ட திட்ட பணிகள் மேற்கொள் ளப்பட்டன.இந்த திட்டப் பணிகளை தமிழக முதல் வர் எடப்பாடி.பழனிசாமி தலைமைச் செயலகத்திலி ருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மீன் இறங்குதளம் கூடத்தை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பணியை தொடங்கி வைத்தார். மீன்வளத் துறை அதிகாரிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கபடி பாண்டி யன், மீனவ பஞ்சாயத்தார் கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் மீன் இறங்குதளத்தில் இருந்து முகத்துவாரம் வரை மண் அரிப்பைத் தடுக்கும் வகை யில் கருங்கல் அல்லது தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்று பஞ்சாயத் தார்கள் மற்றும் மீனவர்கள் எஸ்.பவுன்ராஜ் எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை விடுத்த னர்.