நாகப்பட்டினம், செப்.26- நாகப்பட்டினத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிரவீன் பி.நாயர் புதன்கிழமை அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முந்தைய மாவட்ட ஆட்சி யராக இருந்த சீ.சுரேஷ்குமார், புதிய ஆட்சியரிடம் பொறுப்புகளை ஒப்ப டைத்து விட்டு, சிறுபான்மை நலத் துறை இயக்குநராகப் பணி மாறுத லில் செல்வதால், புதன் அன்று விடை பெற்றார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் பி.நாயர் நாகை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதால், புதன் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியேற்றுக் கொண் டார்.