tamilnadu

img

உள்ளாட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: கிராம மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குநர்கள் மற்றும் கிராமத் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது ரூ.50,000- பணிக்கொடையும், மாத ஓய்வூதியமாக ரூ.2000-ம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.மாரிமுத்து சிரப்புரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.மணி, சங்கத்தின் திருமருகல் ஒன்றியச் செயலாளர் எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.