tamilnadu

img

விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் 

சீர்காழி, ஜூன் 6-கொள்ளிடம் அருகே மணலகரம் கிராமத்திலிருந்து திருச்சிற்றம்பலம் செல்லும் சாலையின் நடுவே உள்ள மின்கம் பங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மணலகரம் கிராமத்திலிருந்து திருச்சிற்றம்பலம் செல்லும் 2 கிமீ தூர சாலைஉள்ளது. இந்த சாலை மேம்படுத்தும் பணி தற்பொழுதுநடைபெறுகிறது. சாலையின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளன. மணலகரத்திலிருந்து, திருச்சிற்றம்பலம் வரை சாலையின் நடுவில் 5 மின்கம்பங்கள்உள்ளன. இவை சாலையின் நடுவிலேயே இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.சாலையின் நடுவிலேயே மின்கம்பங்கள் இருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மின் கம்பங்களை உடனடியாக அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.