tamilnadu

அரசு ஊழியர் சங்கம் வைரஸ் தடுப்பு மருந்து வழங்குதல்

நாகப்பட்டினம், ஜூலை 11- அரசு ஊழியர் சங்கம், நாகை மாவட்ட மையம் சார்பில், மாவட்டச் சித்த மருத்துவ அலுவலகத்துடன் இணைந்து, கொ ரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாகப்பட்டி னம் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அரசு அலுவல கங்களுக்கும் ஆர்செனிக்ஆல்பம் நோய்த்தடுப்பு மருந்து  வழங்கும் துவக்க நிகழ்ச்சி நாகை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், வேதா ரணியம், திருக்குவளை, கீழ்வேளூர், குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி மயிலாடுதுறை ஆகிய எட்டு வட்டாட்சியர் அலுவ லகங்கள், நாகை வேதாரணியம், தலைஞாயிறு, கீழையூர், கீழ்வேளூர், சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், மயிலாடுதுறை, திருமருகல், குத்தாலம் ஆகிய 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கூட்டுறவுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, நீதிமன்றம், பொதுப்பணித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கருவூலம், நகராட்சி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் சிறைச்சாலை உள்ளிட்ட அரசு அலுவல கங்களில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களு டைய குடும்பத்தார் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.இளவ ரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;