tamilnadu

img

வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் இல்லாத வேளாங்கண்ணித் திருவிழா

நாகப்பட்டினம்:
உலகப் புகழ்பெற்ற வேளாங் கண்ணிப் புனித ஆரோக்கிய அன்னைபேராலய 2020 ஆம் ஆண்டு திருவிழாஆக.29 மாலை 6.30 மணிக்குக் கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக பக்தர்கள், பொதுமக்கள் வேளாங்கண்ணிப் பேராலயத்திற்கு வருகை புரிவது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி, பக்தர்கள் வருவதைக் கண்காணிப்பதற்காக, மாவட்ட எல்லைகளில் 21 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 1100 காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே, விழா நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க பேராலயத்தின் சார்பில் தொலைக்காட்சி மற்றும் இணைய தளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, நாகப்பட்டினம் மாவட் டத்தில் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும்  கொரோனா நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே மேற்படி நிகழ்ச்சிகளைக் காணுமாறு மாவட்ட நிர்வாகமும் வேளாங்கண்ணிப் பேராலய நிர்வாகமும் தெரிவித்துள்ளன.தென்கிழக்கு ஆசியாவின் ‘லூர்து’,இந்தியாவில் உலகப் புகழ்பெற்ற ‘பசிலிகா’ (பேராலயம்) என்றெல்லாம் கீர்த்தி பெற்ற வேளாங்கண்ணிப் பேராலயத் திருவிழாவிற்குக் கொடியேற்றம் முதல் திருத்தேர்கள் பவனி வரை 10 நாட்களும் பல்வேறு மாநிலங்கள், தேசங்களிலிருந்தும் மதம், இனம்,மொழி, நிறம் கடந்த லட்சக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள். நடை பயணிகளாக மட்டும்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரம் பேர் வருவர். ஆனால், உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா காரணமாக, வரலாற்றில் முதன்முறையாக, பக்தர்கள் இல்லாமல் வேளாங்கண்ணித் திருவிழா இவ்வாண்டு நடைபெறுகிறது.

;