மயிலாடுதுறை: மயிலாடுதுறை மன்னம் பந்தல் ஏவிசி கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் பல்கலைக்கழக மானியக் குழு நிதி யுதவியுடன் சிறப்பு கருத்தரங்கம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆர். நாகராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பொருளாதாரத் துறை தலைவர் டாக்டர் பிரசாந்த் குமார் பாண்டா “இந்தியாவில் பொருளாதார மந்த நிலை மற்றும் அதன் தாக்கங்கள்” குறித்து பேசினார். பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். பொருளாதாரத் துறை தலைவர் ஆர். கார்த்திகேயன் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் பி.கார்த்தி கேயன் மற்றும் பொருளியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். பேராசிரியை எஸ்.சரண்யா தேவி நன்றி கூறினார்.