tamilnadu

img

சிபிஎம் நிதி வசூல்

தரங்கம்பாடி, மார்ச் 17- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆக்கூர், கடலி, பில்லாவடந்தை, மேமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கட்சி வளர்ச்சி நிதி வசூல் செய்தனர். ஆக்கூர் பகுதிகளில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிதி வசூல் குழுவில் வட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணகி, துரை, கிளை செயலாளர்கள் சிவசுப்ரமணியன், எஸ்.எஸ்.செல்வம், சந்திரசேகரன், ராஜேந்திரன், சுதாமன்,ச ண்முகவள்ளி உள்ளிட்டோரும்,  கடலி பகுதி நிதி சேகரிப்பு குழுவிற்கு வட்டக்குழு உறுப்பினர் வெண்ணிலா தலைமை வகித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர் தம்புசாமி, கிளை செயலாளர்கள் குமரன், தேவேந்திரன், அபி(எ)மகேஷ்வரன், வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர். கிராமப்புற மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து மக்களிடம் நிதி வசூல் செய்தனர்.