tamilnadu

img

மெட்ரிக் பள்ளிகளின் சங்க முப்பெரும் விழா

 தரங்கம்பாடி, அக்.12- நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி கள் சங்கத்தின் முப்பெரும் விழா சனியன்று கலைமகள் கல்லூரியில் சங்கத்தின் மாநிலத் துணை பொதுச்செயலா ளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா, நல்லாசிரியர் விருதுப் பெற்ற ஆசிரி யர்களுக்கு பாராட்டு விழா மற்றும் மாவட்ட மாநாடு ஆகிய முப்பெரும் விழாவில் கலைமகள் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு வரவேற்புரையாற்றினார். நிறுவனர் கே.நெடுஞ்செழியன் விழாவை துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் விருதுகளை வழங்கி உரையாற்றினார். மாநிலப் பொரு ளாளர் ஆர்.நடராஜன், மாநில மக்கள் தொடர்பு அலுவலர் எம்.வெங்கடாச்சலம், கவிஞர் சீனு செந்தாமரை ஆகி யோர் சிறப்புரையாற்றினர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பள்ளி களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்குவதுப் போல் சலுகைகளை வழங்க வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தாமத மின்றி கிடைக்க பெறுவது, நர்சரி,பிரைமரி பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிகளின் தாளாளர்கள், கல்வியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.