தரங்கம்பாடி, மே 25- நாகை மாவட்டம், பொறையார் த.பே.மா.லு கல்லூரி கூட்டுறவு துறை பேராசிரியர்கள், துணை முதல்வர் ஜோயல் எட்வின்ராஜ் தலைமையில் ஆதரவற்ற 30 க்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு தங்களது சொந்த செலவில் நிவாரண பொருள் பளை வழங்கினர். அரிசி மற்றும் மளிகை பொருள்களுடன் சங்கரன்பந்தல், நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கினர்.