tamilnadu

img

உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி உதவிக்காக கையேந்தும் சக மாணவர்கள்

தரங்கம்பாடி, செப்.7- நாகை மாவட்டம் பொறை யாரில் உள்ள த.பே.மா.லு கல்லூரி யில் பி.எஸ்சி., வேதியியல் படிப்பை கடந்த ஆண்டு நிறைவு செய்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த காவியா என்ற மாணவி விபத்துக்குள்ளானார். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்ய பணமின்றி மாணவியின் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர். தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடி கிராமம் காத்தாயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லச்சாமி மகள் காவியா(20). இவர் படிப்பில் படு சுட்டி. கல்லூரி கலை நிகழ்ச்சிகள், இலக்கியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர். கடந்தாண்டு சென்னையில் செஞ்சிலுவை சங்கம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றவர். தாய், தந்தை இருவரும் இல்லாத தால் இவரின் பாட்டி ராக்கம்மாள் தான் அன்றாடம் கூலி வேலை செய்து இவரை படிக்க வைத்துள்ளார். இவ ருக்கு ஒரு தங்கை, தம்பியும் உள்ள தால் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்தால்    கடந்த ஆக.31 அன்று கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர நேர்முகத் தேர்வுக்கு சென்றார். அப்போது சாலையை கடக்கும் போது அரசு பேருந்து மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார்.  உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறியுள்ள மருத்துவர்கள் அதற்கு ரூ.5 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ள னர். இதனையறிந்த இந்திய மாண வர் சங்க தோழர்கள் தங்களுடன் பயின்ற மாணவியின் உயிரை காப் பாற்ற கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்திலும், நேரடியாகவும் பலரிடமும் உதவி கேட்டு வருகின்ற னர். இந்திய மாணவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் பொறையாரை சேர்ந்த சமூக ஆர்வலரும், திமுக பிர முகருமான சந்துரு என்பவர் கோவை க்கு நேரில் சென்று காவியாவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு 1 லட்சம் ரூபாயை உதவியாக அளித் துள்ளார். சந்துருவின் உதவிக்கு நன்றி தெரிவித்துள்ள இந்திய மாண வர் சங்கம் மனமுவந்து உதவி அளிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள கீழ்கண்ட செல்போன் எண்களையும், விபத்துக்குள்ளான காவியாவின் வங்கி கணக்கையும் தெரிவித்துள்ளது.  இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ- 91591-23542, மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன் -99435-39913, மணிகண்டன்(காவியா தம்பி)- 95667-75491, காவியா வங்கி கணக்கு எண்/283001000007276, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பொறை யார் கிளை, ஐஎப்எஸ்சி எண்-IOBA0002830. காவியாவின் மேடை பேச்சை கேட்டு கைகள் வலிக்கும் வரை தட்டிய மாணவர்கள் இன்று கைகள் வலிக்கும் வரை கையேந்தி உதவி கேட்கின்றனர் அதே காவியா வுக்காக.

;