tamilnadu

முதியோர், ஆதரவற்றோர் பாதுகாப்பு தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

மதுரை, ஜூலை 31- தமிழகத்தில் ஆதரவற்ற முதியோர்க ளைப் பாதுகாப்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறி ஞர் அதிசயகுமார் சென்னை உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனு வில், மத்திய அரசு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தை 2007-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதைப் பின்பற்றி தமிழக அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளை அமல் படுத்தியது. இந்தச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் காப்பகங்கள் அமைக்க வேண்டும். ஆனால் பல மாவட்டங்களில் ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கான காப்பகங்கள் இல்லை. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர்களை பாதுகாக்க காப்பகங்கள் ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தை முறையாக வும், முழுமையாகவும் அமல்படுத்தக் கோரி திருச்சிராப்பள்ளி மாவட்டம் கல்லுக் குழியைச் சேர்ந்த பொன்.தம்மபாலா,  ராம் பிரபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சத்யநாரா யணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகா ரத்தில் மாநில அரசின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.