tamilnadu

தேனி ஆனந்தம், காவல்நிலையம் மூடப்பட்டது

தேனி, ஜூன் 23- தேனி மாவட்டம் தேனி- மதுரை சாலையில் உள்ள தேனி ஆனந்தம் ஜவுளிக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஒரு வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஜவுளிக்கடை மூடப்பட்டது.  தேனி மாவட்டத்தில் செவ் வாய்க்கிழமை போடி காவல் சார்பு ஆய்வாளர், நகராட்சி ஊழி யர் உட்பட 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போடி நகர் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. போடி நகர் காவல் நிலை யத்தில் கடனுக்கு ஜாமீன் போட்ட வரை குடும்பத்துடன் கடத்திய வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போடி நகர் காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உட்பட காவல்துறை யினர் விசாரணை நடத்தினர். பின் னர் இவர்களை காவலர்கள் சிலர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒரு வருக்கு கொரோனா தொற்று இருந் தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கைதிகளிடம் விசாரணை நடத்திய காவலர் கள் உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய் வாளர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போடி நகர் காவல் நிலையத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி னர். பின்னர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக் கப்பட்டது. காவல் நிலையத்தில் அனை வருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது. இத னையடுத்து காவல் நிலையம் தற் காலிகமாக மூடப்பட்டது.  போடி நகராட்சி அலுவலகத் தில் ஒருவருக்கும், போடி அரசு மருத்துவமனை ஊழியர் ஒரு வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து வந்த நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் வடகரை வடக்கு தெருவை சேர்ந்த 63 வயது நபர், அனுமார் கோவில் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி, பகவதி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த 58 வயது நபர், தென்கரை தெற்கு புதுத்தெருவை சேர்ந்த 33 வயது,32வயது நபர்கள், தெற்கு தெருவைச் சேர்ந்த 27 வயது வாலிபர் , கணக்கு முத்து தெருவை சேர்ந்த 41 வயது பெண், வடபுதுப்பட்டியை சேர்ந்த 34 வயது வாலிபர் என 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. சின்னமனூர் காந்தி நகர் கால னியை 40 வயது நபர், 40 வயது பேக்கரி ஊழியர், சின்னமனூர் ஆம்புலன்ஸ் தொழில் நுட்ப இயக்குனர் ,வடக்கு தெருவை சேர்ந்த 24 வயது கர்ப்பினி பெண், அதே தெருவை சேர்ந்த 44 வயது பெண், மதுரையில் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த பார்த்த சகதி மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த 37 வயது நபர் என 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி குமாரபுரத்தை சேர்ந்த 52 வயது தனியார் பேருந்து பரிசோதகர், போடி அருகே டொம்புச்சேரி சேர்ந்த 26,24 வயது அண்ணன் தம்பி இருவர், வெங்கடாசலபுரத்தை  சேர்ந்த 31, 34 அண்ணன் தம்பி இருவர், ராயப்பன்பட்டியை சேர்ந்த 64 வயது நபர், ஆண்டி பட்டி அருகே ஏரதிக்காம்மாள்பட் டியை சேர்ந்த கர்ப்பினி பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி பொம்மையன்கவுண் டன்பட்டி 34 வயது காளவாசல் தொழிலாளி ,உஞ்சாம்பட்டியை சேர்ந்த 49 வயது நபர் ,தேவாரம் லட்சமி நாயக்கன்பட்டியை சேர்ந்த 60 வயது பெண் ஆகி யோர் உட்பட 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஒட்டுநர் உட்பட 17 பேருக்கு செவ்வாயன்று கொரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது. அம்மையநாயக்கனூர் காவல்நிலைய காவர் ஒரு வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவலரின் மனைவி, இருமகன்களின் ரத்த மாதிரி கள் சோதனைக்கு அனுப்பப்பட் டுள்ளது.