tamilnadu

தேனி:  75 பேருக்கு கொரோனா

தேனி, ஜூலை 1- தேனி மாவட்டத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. தேனி அல்லிநகரம் காவல்நிலையத்தில் பணியாற்றும் 35 வயது பெண் காவலர், வீரபாண்டி காவலர் குடியிருப்பில் உள்ள அல்லிநகரம் சிறப்பு சார்பு ஆய்வாளர் மனைவி, இரண்டு மகன்களுக்கும், தேனி ஆயுதப்படை காவலராக பணிபுரியும், ஒரு பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது கணவர், ஐந்து வயது மகன், இரண்டு வயது மகள், மற்றும் இரண்டு உறவினர்கள் ஆகி யோருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் உள்ள அனுமந்தன்பட்டி யை சேர்ந்த காவலர் குடும்பத்தைச் சேர்ந்த அவரது எட்டு வயது குழந்தை, உறவினர் இருவருக்கும், கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒரு வர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவ ரது மனைவி, மூன்று குழந்தைகள், அவ ரது தாயார் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்ட்டுள்ளது.

போடி சுப்பிர மணியர் கோவில் தெருவைச் சேர்ந்த 26 வயது பெண் ,ஆண்டிபட்டி அருகே மரிக் குண்டு கிராமத்தைச் சேர்ந்த மதுரை பொதுப்பணித் துறை அலுவலக 32 வயது பெண் தட்டச்சர், தேனி தனியார் உணவகத்தில் பணியாற்றும் அவரது கணவர், பழனிசெட்டிபட்டி மாரியம்மன் கோவில் தெருவைவ் சேர்ந்த 32 வயது பெண், அவரது ஒன்பது வயது மகள், தந்தை பெரியார் தெருவை சேர்ந்த 28 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . அரண்மனைப்புதூர் முல்லை நகர் பிரபு தேவாரம் தெற்குத் தெரு 64 வயது பெண், தேனி ஆனந்தம் ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்த ஜக்கம்பட்டியை சேர்ந்த 43 வயது நபர், ஆண்டிபட்டி துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி யாற்றி வரும் உசிலம்பட்டியை அடுத்துள்ள ஓடைப்பட்டியை சேர்ந்த 67 நபர், மஸ்கட் நாட்டிலிருந்து வந்த தேனி கருவேல்நாய ககன்பட்டி வாசவி காலனியைச் சேர்ந்த 33 வயது நபர், ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டி யை சேர்ந்த 26 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. வருஷநாடு சிங்கராஜபுரத்தை 70 வயது நபர் உட்பட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.