tamilnadu

தேனி, திருவில்லிபுத்தூர் முக்கிய செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து நில மோசடி 9 பேர் மீது வழக்குப் பதிவு
தேனி, பிப்.5- போடி அருகே துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பி.சுகுமார். இவரது தந்தை பெயரில் கோடாங்கிபட்டி கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், கடந்த 2010 ஆண்டு இறந்து விட்ட நிலையில் அந்த நிலத்தை தேனியை சேர்ந்தமலைச்சாமி குடும்பத்தினர் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது தகப்பனார் பழனிச்சாமியின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து கடந்த 2017 ஆண்டு ஜூன்மாதம் 12 ஆம் தேதி தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.அதன்பேரில் விசாரணை நடத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் மலைச்சாமி ,அவரது மனைவி லோகேஸ்வரி,வேலுசாமி மக்கள் ராஜா, பவுன், ரமணி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சலவைத் தொழிலாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய சிபிஎம் கோரிக்கை
மதுரை, பிப்.5- மதுரை மாநகராட்சி 2006-ஆம் ஆண்டு மாமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் சலவைத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கவேண்டுமென ஆணை யாளர் விசாகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சலவைத் தொழிலாளர்கள் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்இரா.விஜயராஜன் பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின், பாண்டி ஆகியோர் மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்ப தாவது:- மதுரை காமராஜர் சாலை கீழசந்தப்பேட்டை, சுடலைமுத்து பிள்ளைசந்து பகுதியில் கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக சலவைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். வைகை ஆற்றை நம்பி சலவைத் தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாநகராட்சி நாங்கள் குடியி ருக்கும் பகுதியை 2006-ஆம் மாமன்ற கூட்டத்தில் அரசின் ஒப்புதலோடு விலைக்கு கொடுக்க ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 2006-ஆம் ஆண்டுமாநகராட்சி கூட்டத்தில் அளிக்கப்பட்ட ஒப்புதல் அடிப்படையில் மாநகராட்சி வீடுகளை தொகுத்து எங்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நகை பறிப்பு 
திருவில்லிபுத்தூர், பிப்.5- திருவில்லிபுத்தூர் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் மனைவி  முத்துலட்சுமி (57). இவர் திங்களன்று பிற்பகல் தனது வீட்டினருகே நின்று கொண்டிருந்துள்ளார். அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயினை திருவில்லிபுத்தூர் அருகே உள்ள தாழையூத்துபட்டியை சேர்ந்த சேர்மதுரை (23)பறித்துள்ளார். முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் சேர்மதுரை திருவில்லி புத்தூர் நகர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.