வருஷநாடு, மே 31- தேனி மாவட்டத்தில் கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிரா மங்களில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் தலைமை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த நிகவைத் தொடர்ந்து மயி லாடும்பாறை ஒன்றிய அலுவலகம் முன்பு தேனி பிரதான சாலையில் குறுக்கே நடை பெற்று வரும் பாலம் கட்டும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாக ஏராளமான கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோரிக்கைகள் தொடர்பாக உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆய்வின் போது மயிலாடும்பாறை கவுன்சிலர் மச்சக்காளை, மாவட்டப் பிரதிநிதி மாடசாமி, ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன், கருப்பசாமி உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.