tamilnadu

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை... பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முல் லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்தமழை காரணமாக கடந்த மாதம்அணையின் நீர் மட்டம் ஒரே வாரத் தில் 22 அடி வரை உயர்ந்தது. இதனையடுத்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கன மழை பெய்ததால் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து 60 அடியை தாண்டியது.

மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம்61.68 அடியாக உள்ளது. நீர் வரத்து910 கன அடி. இருப்பு 3931 மில்லியன் கன அடி.பெரியாறு அணையின் நீர் மட்டம் 126.05 அடி. வரத்து 1703 கனஅடி. திறப்பு 1200 கன அடி. இருப்பு3845 மில்லியன் கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45.40அடி. வரத்து 71 கன அடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 122.01 அடி. வரத்து9 கன அடி. திறப்பு 3 கன அடி.தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுருளி அருவி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

மழையளவு (மி.மீ.): பெரியாறு 26, தேக்கடி 28, கூடலூர் 10, சண்முகாநதி அணை 9, உத்தமபாளையம் 4.3, வீரபாண்டி 52, வைகை அணை 1.6, மஞ்சளாறு 3, கொடைக்கானல் - 5.

;