tamilnadu

கூட்டுறவு சங்கத்தில் மோசடி

கடமலைக்குண்டு, ஜூன் 3- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வரு கிறது. இங்கு பணியாற்றிவரும் மூன்று ஊழியர்கள் கடந்தாண்டு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டவோது போலி  ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ. ஒரு கோடி வரை மோடிச செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த விவசாயிகள் வலியுறுத்தினர். புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கிய கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஏராள மான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். அதன் பின் எந்த விசாரணையும் நடை பெறவில்லை. இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டுமென விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.