tamilnadu

குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

தேனி, ஜன.6- தேனியில் அனைத்து பள்ளிவாசல் சார்பில் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது  தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, ரத்தினம் நகர், ஓடை தெரு, அன்னஞ்சி, ஆண்டிபட்டி, மற்றும் முத்துதேவன்பட்டி ஆகிய முஸ்லிம் ஜமாத்தை உள்ளடக்கிய தேனி வட்டார ஜமாஅத் சார்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தேனி புது பள்ளி வாசல் ஜமாத் தலைவர் கே எம் சம்சுதீன் தலைமை தாங்கினார் .வட்டார ஜமாஅத் தலைவர் சுலைமான் வரவேற்று பேசினார் . ஐக்கிய ஜமாத் தேனி மாவட்டத் தலை வர் பொன்ராஜ் கொந்தாளம் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம மூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் முனீஸ்வரன், சமூக நல்லிணக்க பேரவையின் ஒருங்கி ணைப்பாளர் அன்புவடிவேல், சமூக செயல் பாட்டாளர் கருத்தபாண்டி, அகில இந்திய கிறிஸ்தவ நலக்குழுவின் தமிழக தலைவர் ஜேம்ஸ் ராதாகிருஷ்ணன், கிறிஸ்தவ போத கர் தேவகுமாரன், இந்திய தொழிற்சங்க மையத்தின் சடையாண்டி, தமுஎகச வின் மாநில தலைவர்களில் ஒருவரான எழுத்தா ளர் ம. காமுத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லத் தலைவர்களில் ஒருவரான கே.ராஜப்பன் மற்றும் திருச்சி சிந்தாமணிபட்டி அரபிக் கல்லூரி நிறுவனர் சிராஜ்தீன் ரஷாதி ஆகி யோர் கருத்துரை வழங்கினர். வட்டார ஜமாத் துணைத் தலைவர் ஹக்கிம் நன்றி கூறி னார். சமூக நல்லிணக்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் முகமது சபி, வட்டார ஜமாஅத் பொருளாளர் சர்புதீன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

;