tamilnadu

img

குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் ஆவின் ஓ.ராஜாவை கண்டித்து விவசாயிகள் போராட்டம் சாலையில் பாலை கொட்டியதால் பரபரப்பு

தேனி, ஜூன் 10- தனியாரிடம் பாலை கொள் முதல் செய்து ,விவசாயிகளிடம் விலையை குறைத்து வாங்கும் துணை முதல்வர் தம்பியும், ஆவின் தலைவருமான ஓ. ராஜாவை கண்டித்து ஆண்டிபட்டி யில் விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், பிள்ளைமுகன்பட்டி, பொம்மி நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிரா மங்களில் விவசாயிகள் கால் நடை வளர்ப்பு தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். விவசாயத் திற்கு அடுத்தபடியாக பால்மாடு களை வளர்த்து வருகின்றனர். இங்கு கறக்கப்படும் பால் கிரா மங்களில் செயல்படும் பால் கூட்டு றவு சங்கங்கள் மூலம் கொள் முதல் செய்யப்பட்டு தேனி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓ.ராஜா தலைமையிலான தேனி ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 31 ரூபா யிலிருந்து 27 ரூபாயாக குறைத்து வழங்கி வருவதாகவும், மேலும் தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த விலைக்கு பாலை வாங்கிக்கொண்டு தங்களது பாலை எடுக்காமல் திருப்பி அனுப்புவதாகவும் கால்நடை வளர்ப்பவர்கள் புகார் கூறு கின்றனர்.  இந்நிலையில் பால் கொள் முதல் செய்யாத ஆவின் நிறு வனத்தை கண்டித்து ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்க னூர் கிராமத்தில் பாலை சாலை யில் கொட்டி போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த போராட்டத்தில் மூன்று கிராமங்களை சேர்ந்த  கால்நடை வளர்ப்பவர்கள் கலந்துகொண்டனர். பாலை கீழே கொட்டி போராட்டத்தில் ஈடு பட்ட சம்பவம் ஆண்டிபட்டி பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

;