tamilnadu

img

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் திறன் 2007-ஆம் ஆண்டே இருந்தது! இஸ்ரோ முன்னாள் தலைவர் தகவல்

விண்வெளியில் செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாகவும், இதன் மூலம் உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு பிறகு இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்றும் பிரதமர் மோடி, புதன்கிழமையன்று கதை அளந்திருந்தார். இதற்காக, “இன்று நண்பகல் 11.45 முதல் 12.00 மணிக்குள் முக்கிய தகவலுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளேன். தொலைக்காட்சி, ரேடியோ, சமூகவலைதளங்களில் பாருங்கள்” என்று டுவிட்டரில் செய்தி முன்னோட்டமெல்லாம் போட்டார். ஆனால், இந்த சோதனை புதனன்று நடத்தப்பட்டாலும், 2007-ஆம் ஆண்டிலேயே இதற்கான திறமையை இந்தியா பெற்றிருந்தது என இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றை அவர் அளித்துள்ளார். “வானிலைக்கான பழைய செயற்கைக் கோள் ஒன்றை கடந்த 2007-ஆம் ஆண்டில் ஏவுகணை மூலம் சீனா அழித்தது. அப்போதே இந்தியாவும் அந்த திறனை பெற்றிருந்தது. எனினும் அதை நிறைவேற்றுவதற்கான அரசியல் ஆர்வம் அப்போது இல்லை. ஆனால் தற்போது இந்த திட்டத்தை பிரதமர் மோடி அரசியல் ஆர்வத்துடன் செயல்படுத்தி இருக்கிறார்” என்று மாதவன் நாயர் குறிப்பிட்டுள்ளார்.

;