tamilnadu

img

உ.பி. சம்பவத்தை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்...

தென்காசி:
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென் காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாஅலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு ஆலங்குளம் தாலுகாச் செயலாளர் வி.குணசீலன் தலைமை தாங்கினார். 

கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தி.கணபதி, ஆர்.மோகன், பி.கற்பகம், ராஜகுரு, எம்.வேல்முருகன், ஒன்றியச் செயலாளர்கள் மாரிச்செல்வம், ராமகிருஷ்ணன், ஆலங்குளம் கிளைச் செயலாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் நெல்லை மேலப் பாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கதாலுகா குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சஞ்சய் முன்னிலை வகித்தார். மார்க் சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் பாளை தாலுகாச் செயலாளர் பா.வரகுணன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து வைத்தார். வாலிபர் சங்க பேரின்பராஜ், அணில் புஷ்ப தாஸ், ரஞ்சித், மனோஜ், வினோத், சதாம் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.