பீடித் தொழிலாளர் சங்க புதிய கிளை
தென்காசி,ஆக 27- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அனந்தநாடார்பட்டியில் சிஐடியு பீடி தொழிலாளர் சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு சண்முகவடிவு தலைமை தாங்கி னார். சிஐடியு பீடிசங்க மாவட்ட பொ துச் செயலாளர் வேல்முருகன் பேசி னார். புதிய நிர்வாகிகளாக தலைவர் உலகம்மாள், துணைத் தலைவர் பார்வதி, செயலாளர் சண்முக வடிவு, துணை செயலாளர் பேபிஷாலினி, பொருளாளர் முத்துமாரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திய மாநில அரசுகள்கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ.7,500 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேரளத்தில் 2476 பேருக்கு கோவிட் : ஒரே நாளில் குணமடைந்தது 1,351 பேர்
திருவனந்தபுரம், ஆக.27- கேரளத்தில் புதனன்று 2476பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. 1351 பேர் குணமடைந்தனர். 13 கோவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டன. இதுவரை மாநிலம் முழுவதும் மொத்தம் 257 கோவிட் மரணங்கள் நடந்துள்ளன. புதனன்று கோவிட் கண்டறியப்பட்ட தில் 64 பேர் வெளி நாடுகளில் இருந்தும் 99 பேர் மற்ற மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 2243 பேருக்கு தொடர்பு மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் நோய் தொற்றிடம் தெரியாதோர் 175 பேர். 69 சுகாதாரத்துறை ஊழியர்க ளுக்கு நோய் தொற்று உறுதியானது. இதுவரை 22, 344 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டு தற்போது சிகிச்சை யில் உள்ளனர். மொத்தம் 41,694 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 1,89,781 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,72,135 பேர் வீடுகள்/ நிறுவனங்க ளில் உள்ளனர். 17,646 பேர் மருத்துவம னைகளில் உள்ளனர். புதனன்று மட்டும் 2098 பேர் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 40,352 மாதிரிகள் சோதனை க்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 15,25,792 மாதிரிகள் சோத னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்க ளப் பணியாளர்களின் 1,69,312 மாதிரிக ளும் சோதனைக்கு அனுப்பி வைக்கப் பட்டன.
தகனத்துக்கு கூடுதல் தொகை வசூலித்த அதிகாரி சஸ்பென்ட்
நாகர்கோவில், ஆக.27- குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இது வரை 129 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரி ழப்பவர்களை உரிய வழிகாட்டு நெறி முறைகளின் கீழ் அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. அதன்படி தொற்றால் இறப்பவர்கள் மாநக ராட்சியால் நடத்தப்படும் புளியடி பகுதியில் உள்ள அமிர்தவனம் மின்சார சுடுகாட்டில் வைத்து தகனம் செய்து வருகின்றனர். மேலும் வெளியூரிலிருந்து இங்கு வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்ப வர்களையும் அவர்களது உறவினர்கள் இவ்வாறு தகனம் செய்கின்றனர். கொரோனாவால் இறப்ப வர்களை மாநகராட்சி ஊழியர்கள் முழு கவச உடை அணிந்து உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின் பற்றி மின்சார தகன மேடையில் வைத்து தகனம் செய்கின்றனர். உடல்களை எரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புளியடி அமிர்தவனம் சுடு காட்டில் பணியில் இருக்கும் சில மாநகராட்சி ஊழி யர்கள் உடல்களை தகனம் செய்வதற்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் விசாரணை நடத்தி வந்தார். இதில் சுகாதார ஆய்வா ளர் சத்யராஜ் என்பவர் கூடுதல் தொகை வசூலித்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை, மாநகராட்சி ஆணையர் ஆஷா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.