தென்காசி, மே 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழுமுன்னாள் உறுப்பின ரும், விவசாய சங்கத்தின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரும், சிறந்த ஆளுமை மிக்க தலைவருமாகிய தோ ழர் கே.வரதராசனின் மறை வையொட்டி தென்காசி வேன் ஸ்டாண்டில் இரங்கல் கூட்டம் தென்காசி தாலுகா செயலா ளர் அயூப்கான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செய ற்குழு உறுப்பினர் கணபதி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன், தென்காசி தாலுகா கமிட்டி உறுப்பி னர்கள் ஆர்.சங்கரி, கே.மாரி யப்பன், லெனின்குமார், கிரு ஷ்ணண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.